தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆலோசனைக் கூட்டம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆலோசனைக் கூட்டம்.
X
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆலோசனைக் கூட்டம் பரமத்திவேலூர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,பிப். 22: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பரமத்தி வேலூர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் மெ.சங்கர் தலைமை தாங்கினார். பரமத்தி ஒன்றியச் செயலாளர் க.சேகர் l வரவேற்புரை ஆற்றினார். கபிலர்மலை ஒன்றியத் தலைவர் ந.மணிவண்ணன் முன்னிலை வகித்தார். நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நிதி மோசடித்திட்டமான புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் , ஒன்றிய அரசின் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் ஆகியவற்றை நிராகரித்து விட்டு ஆசிரியர்- அரசு ஊழியருக்கு தேர்தல் அறிக்கை உறுதிமொழியின் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை 01.04.2003 முதல் தொடர்ந்திடல் வேண்டும். மத்திய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியத்தினை தமிழ்நாட்டின் இடைநிலை தொடக்கநிலை ஆசிரியருக்கு 01.06.2006 முதல் வழங்கிடல் வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்கு மாநில பணிமூப்பு முறையை திணிக்கும் அரசாணை எண் :243/நாள்:21.12.2023 முற்றிலுமாக இரத்து செய்யப்படுதல் வேண்டும் . தமிழ்நாட்டின் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரமான 10 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வரும் 25.02.2025 அன்று நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்பது என்றும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் 250 ஆசிரியப் பெருமக்களை பங்கேற்கச் செய்வது என்றும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் பிஎஸ்என்எல் இணைய இணைப்புக் கட்டணத் தொகையை நேரிடையாத தமிழ்நாடு அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு செலுத்திடல் வேண்டும். பள்ளிகளுக்கு தரவேண்டிய பிஎஸ்என்எல் இணைய பயன்பாட்டுக் கட்டண நிலுவைத் தொகையை உடன் பள்ளிகளுக்கு விடுவித்திடல் வேண்டும். பள்ளி ஆண்டுவிழா மற்றும் நூற்றாண்டு விழாவிற்கு சொற்பமான தொகை ஒதுக்குவதை கைவிடுதல் வேண்டும். பள்ளிகளின் விழாத் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுதல் வேண்டும். புதிய கல்வித்திட்டம்-2020 , மூன்றுமொழிக்கொள்கை மற்றும் பிஎம் ஶ்ரீ பள்ளிகள் போன்றவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கட்டாயப்படுத்துவதும், ஒன்றிய அரசின் கல்வி பங்கு நிதியை தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்க மறுப்பதுமான ஒன்றியக்கல்வி அமைச்சரின் நடவடிக்கைகளை இக்குழு வன்மையாக கண்டனம் செய்கிறது . உள்ளிட்ட பல்வேறு கோரிகள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கபிலர்மலை ஒன்றிய பொறுப்பாளர்கள் இர.மணிகண்டன்,வி சிவக்குமார், பரமத்தி ஒன்றியப் பொறுப்பாளர்கள் ச.காமராஜ், லூ.சூசை அந்தோணி,நா.வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்ட நிறைவில் கபிலர்மலை ஒன்றியப் பொருளாளர் பொ முத்துசாமி நன்றி கூறினார்.
Next Story