வேர்டு நிறுவனம், கோமட்சு இந்தியா நிறுவனம் சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கழிப்பறை கட்டிடம் திறப்பு

வேர்டு நிறுவனம், கோமட்சு இந்தியா நிறுவனம் சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கழிப்பறை கட்டிடம் திறப்பு
X
பொத்தனூர் வேர்டு நிறுவனம், கோமட்சு இந்தியா நிறுவனம் சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கழிப்பறை கட்டிடம் திறப்பு.
பரமத்தி வேலூர்,பிப்.22: கோமட்சு இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் வேர்டு நிறுவனமும் இணைந்து மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு மகளிர் மேல்நிலைப்ப ள்ளிக்கு மாணவிகளுக்கான கழிப்பறை கட்டிடம் கட்டி ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.வேர்டு - நிறுவன செயலர் சிவகாம வல்லி வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு டெல்லி எச். ஆர்.ஜி.ஏ.கோமட்சு இந்தியா பிரைவேட் லிமிடெட் துணை மேலாளர் பாபு தலைமை வகித்து பேசியதாவது:- தங்களது நிறுவனத்தில் சி.எஸ்.ஆர். திட்டத்தின் எந்த மாதிரியான திட்டங்க ளுக்கு நிதியினை பயன் படுத்துகிறோம். அதிலும் கிராமப்புறப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்குவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். டெல்லி கோமட்சு இந்தியா பிரைவேட் லிமிடெட் பாதுகாப்பு துறை, துணை மேலாளர் ராஜகணேசன் பேசியதாவது. தங்களுக்கு கிடைக்கப்பெற்ற இவ்வுதவியை நல்லமுறையில் பராமரிப்பு செய்து பாதுகாக்க வேண்டும், எல்லோரும் பயன் படுத்தும் நிலையில் தூய்மையாக இருக்குமாறு வைத்து கொள்ளவேண்டும் என்று கூறினார். வேர்டு நிறுவன ஆலோசகர் ராதா ஸ்ரீனிவாசன் பேசிய தாவது. ஏழை, எளிய மற்றும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவி களுக்கு இவ்வாறான உதவிகள் தங்கள் மூலமாக கிடைக்கப்பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதே போன்ற பின் தங்கிய கிராமப்புற பள்ளிகளுக்கு உதவி செய்ய போவதாகவும் தனது உரையில் கூறினார். விழாவில் மல்லசமுத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுமதி மற்றும் மல்லசமுத்திரம் சர்வ சிக்சா அபியான் ராஜராஜேஷ்வரி மற்றும் பள்ளியின் ஆசிரிய,ஆசிரி யைகள், மாணவ-மாணவி கள் கலந்து கொண்டனர். இறுதியில் திட்ட மேலாளர் ரகுவரன் நன்றி கூறினார்.
Next Story