நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு தற்கொலைக்கு முயன்ற வியாபாரி

நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு தற்கொலைக்கு முயன்ற வியாபாரி
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு இன்று 22-ம் தேதி மதியம் ஒரு நபர் அங்கு வந்து, அவரது  தலையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.  இதை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து காப்பாற்றினர்.       மேலும் அந்த நபர்  நீதி வேண்டும் நீதி வேண்டும் என புலம்பியதால், போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.                 விசாரணையில் அவர் பெயர் பாலகிருஷ்ணன்(50) எனவும் தோவாளை மலர் சந்தையில் பூ வியாபாரம் செய்து வருவதாகவும் தெரிவித்தார். அவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், புகாரை போலீசார் விசாரிக்கும் போது முறையாக விசாரிக்காததால்,  தனக்கு  நீதி வேண்டுமென நீதிமன்றத்திற்கு நாடி வந்ததாகவும் கூறினார்.      மேலும்  நீதி கிடைக்க வில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்து பெட்ரோலை தலையில் ஊற்றி பரபரப்பை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story