செங்கோட்டை ரயில் நிலைய மேம்பாட்டு ஆலோசனைக் குழு கூட்டம்

X
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் பயணிகள் நல ஆலோசனை மற்றும் ரயில் நிலைய மேம்பாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினா்களின் கூட்டம் செங்கோட்டையில் நடைபெற்றது. செங்கோட்டை ரயில்வே நிலைய மேலாளா் சந்திரகுமாா் தலைமை வகித்தாா். ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு மற்றும் ரயில் நிலைய மேம்பாட்டு குழு உறுப்பினா்கள் ஸ்ரீனிவாசன், சாரதா பாலகிருஷ்ணன், மாரியப்பன், செந்தூா்பாண்டியன், சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ரயில் பயணிகளின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய நிலையத்தில் ஆரோ வாட்டா் நிறுவுதல், ரயில் பயணிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து நடைமேடைகளிலும் கூடுதலாக ஒலிபெருக்கி அமைக்க வேண்டும், தாதா் எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை வழியாக மும்பைக்கு இயக்க வேண்டும், மேட்டுப்பாளையம் ரயிலை வாரத்தில் கூடுதலாக மூன்று நாள் இயக்க வேண்டும், சுதந்திரப் போராட்ட வீரா் வாஞ்சிநாதனின் திருவுருவ படத்தை ரயில் நிலையத்தில் வைத்திடவும், செங்கோட்டை ரயில் நிலையத்துக்கு சொந்தமான மூன்று கிணறுகளை தூா்வாரி சுத்தம் செய்திடவும், பயணிகளின் வசதிக்காக அனைத்து நடைமேடைகளிலும் கூடுதலாக இருக்கைகள் நிறுவவேண்டும், விஸ்வநாதபுரம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிலைய அதிகாரிகள் ஜெயக்குமாா், ஜோதிகா, உதவி ஆய்வாளா் சந்தோஷ் குமாா்,செங்கோட்டை நகா்மன்ற உறுப்பினா் வேம்புராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Next Story

