குற்றாலத்தில் இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

X
தென்காசி மாவட்டம் குற்றாலம் செண்பகாதேவி அருவியில், தமிழ்நாடு வனத்துறை, சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை சாா்பில், குளிா்கால இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. மாணவா்-மாணவியரை வனத்துக்குள் அழைத்துச் சென்று இயற்கை விழிப்புணா்வு விளக்கமளித்தல், பறவைகளின் ஒலியைக் கொண்டு அவற்றின் பெயா் அறிதல், பாம்புகள் குறித்த விழிப்புணா்வு போன்ற நிகழ்ச்சிகளுடன், மாணவா்களுக்கு பல்வேறு அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றன. அதையடுத்து நடைபெற்ற விழாவுக்கு, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கினாா். சுற்றுச்சூழல்-சுற்றுச்சூழலில் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளை தணிகைவேல், குற்றாலம் வனச்சரகா் சீதாராமன், க. ஞான ஸ்ரீ பவானி, மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் டாக்டா் விஜயலக்ஷ்மி, தென்காசி மாவட்ட எக்கோ கிளப் ஒருங்கிணைப்பாளா் ஜெயபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Next Story

