சேலம் வடபத்திர காளியம்மன் கோவில் திருவிழா

X
சேலம் கிச்சிப்பாளையம் கர்ணாநகர் உள்ள வட பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. விழாவில் கிடா வெட்டுதல் பொங்கல் வைத்தல், அன்னதானம் வழங்குதல், குத்துவிளக்கு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மாலை கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு பால்குட ஊர்வலம், அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
Next Story

