சேலம் கன்னங்குறிச்சி அண்ணாநகரில் அங்காளம்மன் கோவிலில்

X
சேலம் கன்னங்குறிச்சி அண்ணாநகரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் சிவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழா வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி அம்மனுக்கு பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயக்கண்ணன், சிந்துஜா, முத்துமலை முருகன் கோவில் நிர்வாகி சரோஜா நடராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வருகிற 26- ந் தேதி காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், இரவு மகா சிவராத்திரி பூஜையும் நடக்கிறது. 27-ந் தேதி அங்காளம்மன், விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, அமாவாசை பெரும் பூஜை நடக்கிறது. 27-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு பூஜையும், மார்ச் 1-ந் தேதி அங்காளம்மன், காளியம்மன் ஊர் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மார்ச் 2-ந் தேதி அங்காளம்மனுக்கு மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியும், கருப்பண்ணசாமிக்கு பெரும்பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கணபதி, சாந்தி, சோனு, அபர்ணா, ஹரிஹரன் ஆகியோர் செய்துள்ளனர்.
Next Story

