நாகர்கோவிலில் சிறப்பு நீதிமன்றம் திறப்பு

X
குமரியில் பழங்குடியினர் மற்றும் ஆதி திராவிடர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் நாகர்கோவிலில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஐந்தாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் வரவேற்றார். புதிய நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ ராம் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, அனிதா சுமந்து, ஜெகதீஷ் சந்திரா, விக்டோரியா கவுரி, வடமலை, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட கலெக்டர் அழகுமீனா, எஸ் பி ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் குமரி மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க தலைவர் ஜெயக்குமார் மற்றும் வக்கீல் சங்க உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story

