விபத்தில் காயமடைந்தவர் சாவு

X
துறையூர் தாலுகா, கரட்டாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 53). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் துறையூரில் இருந்து முசிறி செல்லும் சாலையில் பொன்னுசங்கம்பட்டியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு இருந்தார். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

