திருச்சி: கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

திருச்சி: கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
X
தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை
தா.பேட்டையை அடுத்த மேலகொத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்து. கட்டிட தொழிலாளி. இவரது மகன் கவின் (வயது 19) கேட்டரிங் படித்துவிட்டு வெளியூரில் சில மாதங்கள் வேலை பார்த்து வந்தார். அப் போது உடம்பில் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக ஊருக்கு திரும்ப வந் துள்ளார். மேலும் இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். வேலைக்கு செல்ல முடியாததால் கவின் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த கவின் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story