குமரியில் அதிமுக பிரமுகர் கைது

X
குமரி மாவட்டம் பார்வதிபுரம் பகுதி சேர்ந்தவர் ஜோன்ஸ்ராஜ் என்பவர் மனைவி நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் ஒப்பந்த பேராசிரியராக இருந்தார். இவருக்கு நிரந்தர பேராசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி நாகர்கோவில் பெருவிளையை சேர்ந்த பள்ளவிளை ராஜேஷ் என்பவர் ரூ 5 லட்சத்தை ஜோன்சராஜிடம் வாங்கியுள்ளார். ஆனால் வேலை நிரந்தரமாகவில்லை. இதையடுத்து பணத்தை திருப்பி கொட்டபோது ராஜேஷ் திருப்பி கொடுக்கவில்லை. இது குறித்து கடந்த 2021ல் புகார் அளிக்கப்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை சம்மந்தப்பட்ட பள்ள விளை ராஜேஷ் மற்றும் அவரது மனைவியை விசாரணைக்கு போலீசார் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இருவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் மனைவி விடுவிக்கப்பட்டார். ராஜேஷை கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மருத்துவ பரிசோதனை சென்றபோது, ராஜேஷ் நெஞ்சுவலிப்பதாக கூறியதை அடுத்து அவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதாகி உள்ள பள்ள விளை ராஜேஷ் அதிமுகவை சேர்ந்தவர் ஆவார். முன்னாள் அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அவர்.
Next Story

