காவேரிப்பாக்கம் கட்டுமான பணியினை உதவி இயக்குனர் ஆய்வு!

காவேரிப்பாக்கம் கட்டுமான பணியினை  உதவி இயக்குனர் ஆய்வு!
X
வணிக வளாகம் கட்டுமான பணியினை பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆய்வு
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1 கோடிேய 78 லட்சம் மதிப்பில், தினசரி சந்தை மற்றும் வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது.இந்த பணிகளை வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஞானசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுமான பொருட்கள் தன்மை மற்றும் பணிகள் விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கங்களை கேட்டறிந்தார். இதனையடுத்து பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
Next Story