காவேரிப்பாக்கம்:அடையாளம் தெரியாத வாகனம் மோதி கல்லூரி மாணவன் பலி!

X
காவேரிப்பாக்கம் அடுத்த சிறுவளையம், உளியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்வாச்சலம் (வயது 64), அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மோகன்ராஜ் மூத்த மகன் மோகன்ராஜ் (26), திண்டிவனம் பகுதியில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தங்கள் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்ற நேற்று முன்தினம் வந்தார். திருவிழா முடிந்த பின்னர் மீண்டும் கல்லூரிக்கு செல்ல அன்று இரவு சித்தஞ்சி கிராமத்தில் இருந்து ஓச்சேரி நோக்கி தேசிய நெடுஞ் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோகன்ராஜ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பக்தவச்சலம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

