நெமிலியில் தி.மு.க சார்பில் ஆலோசனை கூட்டம்

நெமிலியில் தி.மு.க சார்பில் ஆலோசனை கூட்டம்
X
தி.மு.க சார்பில் ஆலோசனை கூட்டம்
நெமிலி கிழக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றியக்குழு தலைவருமான பெ.வடிவேலு தலைமை தாங்கினார். நெமிலி பேரூர் செயலாளர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் விழாவை கிளைக் கழகம் மற்றும் பேரூராட்சி வார்டுகள் முழுவதும் கட்சி கொடி ஏற்றி, இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்குதல், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உத விகள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. மேலும் மார்ச் மாதம் 16-ந் தேதி நெமிலி கிழக்கு ஒன்றியம் மற்றும் நெமிலி பேரூர் சார்பில், தி.மு.க. அரசின் சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றஇருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
Next Story