நெல் விதைப்பண்ணைகளில் அதிகாரி ஆய்வு

X
தாராபுரம் தாலுகாவில் 4ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் நீண்டகால (160 முதல் 165 நாட்கள்) மற்றும் மத்திய கால (130 முதல் 135 நாட்கள்), குறுகிய கால (105 முதல் 110 நாட்கள்) ரகங்களில் விதை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. அமராவதி பாசனப் பகுதிகளான தளவாய்பட்டினம், செலாம்பாளையம், அலங்கியம் பகுதிகளில் பல்வேறு ரகங்களில் விதை பண்ணைகள் அமைக் கப்பட்டுள்ளன. இவற்றில் வல்லுநர் விதை மூலம் விதைப் பெருக்கம் செய்துள்ள ஆதார நிலை விதை பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது விதை சான்றளிப்பு அலுவலர்கள் உடுமலை மற்றும் தாராபுரம், மூலனூர் வட்டார அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story

