மாத்தூர் : காமராஜர் அடிக்கல் திடீரென திறந்த காங்கிரசார்

X
குமரி மாவட்டம் மாத்தூரில் ஆசியாவில் மிகப்பெரிய மாத்தூர் தொட்டி பாலம் உள்ளது. இது கடந்த 1968 ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டதாகும். இந்த பாலத்தின் நுழைவு பகுதியில் காமராஜர் உருவம் படம் பதிக்கப்பட்ட அடிக்கல் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி காலையில் காமராஜர் உருவம் பதித்த அடிக்கல் உடைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து திருவட்டாறு போலீசார் விசாரித்தனர். இதற்கிடையே இந்த கல்வெட்டு மீண்டும் பொதுப்பணித் துறையால் சீரமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அடிக்கல் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று 23-ம் தேதி காலை குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமையில் காங்கிரசார் கல்லை திறந்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

