தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
X
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி பணியாளர் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி பணியாளர் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  வங்கியில் தேவையான அளவு பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர படுத்த வேண்டும், வாரத்தில் 5 நாட்கள் பணியினை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் கனரா வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் நிர்வாகி கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார்.  கனரா வங்கி தொழிற்சங்க நிர்வாகி  சக்திவேல் வரவேற்றார்.  தமிழ்நாடு கிராம வங்கி தொழிற்சங்க நிர்வாகி தங்கமாரியப்பன், பாங்க் ஆஃப் பரோடா வங்கி தொழிற்சங்க நிர்வாகி ராஜலெட்சுமி, கனரா வங்கி தொழிற்சங்க நிர்வாகி ஜெயராம், எஸ்பிஐ தொழிற்சங்க நிர்வாகி கார்திகேயன், உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பாங்க் ஆஃப் பரோடா வங்கி தொழிற்சங்க நிர்வாகி சன்னாசி நன்றியுரை வழங்கினார்.
Next Story