தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மாற்றம்

தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மாற்றம்
X
தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் கழகம் சுப்பிரமணி விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தர்மசெல்வன் கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் தடங்கம் சுப்பிரமணியம் அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து. அவருக்குப் பதிலாக பி.தர்மசெல்வன் டீ.க்கடை. கோடி அள்ளி, கூத்தப்பாடி, தருமபுரி அவர்கள் தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப் பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து கொள்ளப்படுகிறார்கள்பணியாற்றிட வேண்டுமென அண்ணா அறிவாலயம் துரைமுருகன் பொதுச் செயலாளர், தெரிவித்துள்ளார் இதனை அடுத்து இன்று காலை முதலே தி.மு.க. கட்சித் தொண்டர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட கழக பொறுப்பாளர் தர்மசெல்வத்திற்கு புதிய உற்சாகத்துடன் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்
Next Story