திருத்தணி முருகன் கோவிலில் நிர்வாகிகள் ஆய்வு

திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தரிசனத்திற்கு விடுமுறை தினத்தில் குவியும் பக்தர்கள் பக்தர்கள் நலம் கருதி அடிப்படை வசதிகள் குறித்து பாதுகாப்பு குறித்து திருக்கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை ஆய்வு மேற்கொண்டனர்
திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தரிசனத்திற்கு விடுமுறை தினத்தில் குவியும் பக்தர்கள் பக்தர்கள் நலம் கருதி அடிப்படை வசதிகள் குறித்து பாதுகாப்பு குறித்து திருக்கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை ஆய்வு மேற்கொண்டனர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் இந்த திருக்கோயில் அனுதினமும் மற்றும் வார இறுதி நாட்கள் போன்ற விசேஷ நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், மற்றும் தெலுங்கானா மாநிலம் ஆகிய பகுதியிலிருந்து முருக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலை கோவிலுக்கு குவிந்து வருகின்றனர் இப்படி சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நலன் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு பணிகள் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், திருத்தணி காவல்துறை டி.எஸ்.பி கந்தன், ஆகியோர்கள் தலைமையில் மலைக்கோயில் வளாகத்தில் மற்றும் மலையடிவாரத்தில் ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது பக்தர்கள் வரிசையில் செல்லும் பகுதியில் சீர்படுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு மின்விசிறி மற்றும் புனித நீர் ஏற்படுத்துவது என்று முடிவு செய்தனர், மற்றும் வரும் வெயில் காலங்களில் சமாளிக்கும் வகையில் வரும் பக்தர்களின் நலனுக்காக குடிதண்ணீர் வசதிகள், பக்தர்கள் வரிசையில் செல்லும் பகுதியில் நிழற்குடை வரிசை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர் மேலும் சிறப்பு வி.ஐ.பி பக்தர்கள் செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை இந்த பகுதியில் மேற்கொள்வது குறித்தும் பக்தர்கள் அமர்வதற்கு போதிய சிமெண்ட் நாற்காலிகள் ஏற்படுத்துவது மலைக்கோயில் அடிவாதாரத்தில் இருந்து மலைக்கோயில் வரை வரும் பக்தர்களுக்கு கூடுதல் கழிப்பிட வசதியை மேம்படுத்துவது புதிதாக கட்டுவது கண்காணிப்பு கேமரா மேம்படுத்துவது கண்காணிப்பு கேமரா மலைக்கோயில் முழுவதும் அதிகப்படுத்துவது போக்குவரத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து விதிமிரல் செய்யும் வாகனங்கள் அபராதம் ஏற்படுத்த போன்ற பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு விரைவாக இந்த பணிகளை முடிக்க இந்த ஆய்வில் முடிவு செய்யப்பட்டது இந்த ஆய்வின்போது காவல்துறை ஆய்வாளர் மதிரசன், திருக்கோயில் அறங்காவலர்கள்,: கோ. மோகனன், வி.சுரேஷ்பாபு,மு. நாகன், மற்றும் திருக்கோயில் சூப்பிரண்ட் சித்ரா, மலைக்கோயில் அதிகாரி அன்பழகன், தலைமை செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செய்ய பொறியாளர் நேதாஜி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Next Story