உத்திரமேரூரில் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

உத்திரமேரூரில் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்
X
உத்திரமேரூரில் கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில், காஞ்சிபுரம் சாலை, செங்கல்பட்டு சாலை, வந்தவாசி சாலை, எண்டத்தூர் சாலை ஆகிய பிரதான சாலைகள் உள்ளன.இந்த சாலைகளின் வழியாக, சுற்றுவட்டார 60-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், உத்திரமேரூருக்கு தினமும் வந்து செல்கின்றனர். இச்சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நிறைந்து காணப்படுவது வழக்கம். இந்நிலையில், பள்ளி, கல்லூரி, அலுவலகம் தொடங்கும் நேரங்களில், பிரதான சாலைகளின் வழியாக கனரக வாகனங்கள், மண், எம்.சான்ட், ஜல்லிகள் ஆகியவற்றை ஏற்றிச்செல்லும் லாரிகள் நகருக்குள் செல்கிறது.அவ்வாறு செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் குறித்த நேரத்திற்கு செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், காலை 8 : 00 மணிமுதல் 10 : 00 மணி வரையிலும், மாலை 4 : 00 மணிமுதல் 6 : 00 மணி வரையிலும், கனரக வாகனங்கள் உத்திரமேரூர் நகருக்குள் செல்வதை தடுத்து நிறுத்தக்கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, உத்திரமேரூரில் கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story