தோவாளையில் வாலிபரை மிரட்டி தங்க நகை பறிப்பு

தோவாளையில் வாலிபரை மிரட்டி தங்க நகை பறிப்பு
X
2 பேர் கைது
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதி சேர்ந்தவர் சிதம்பரநாதன் மகன் காசிநாதன். இவர் ஐடி பிரிவில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.       தோவாளை ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது, இரண்டு பேர் . நின்று கொண்டு இருந்தனர். திடீரென காசிநாதன் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை நிறுத்துமாறு கூறி, தொடர்ந்து அவர்கள் ரெண்டு பேரும் காசிநாதனை  மிரட்டி அவர் கையில் அணிந்திருந்த சுமார் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள தங்க பிரேஸ்லெட்டை கழற்றி வாங்கிக் கொண்டவுடன், மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.         இது குறித்து காசிநாதன் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் காசிநாதனிடம் நகை திருடியது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துராஜ் (23) என்பதும், அவர்  திருமலையாபுரம் பகுதியில் வசித்து வருவதும், இன்னொருவர் அனந்த பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (30) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் ரெண்டு பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.
Next Story