கூடலூர் பகுதியில் பொது இடத்தில் ஆபாசமாக பேசியவர் கைது

கூடலூர் பகுதியில் பொது இடத்தில் ஆபாசமாக பேசியவர் கைது
X
கைது
தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் நேற்று (பிப்.22) கூடலூர் பகுதியில் குற்ற தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது முருகன் என்பவர் பொது இடத்தில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லக்கூடிய பொது மக்களை ஆபாசமாக பேசிக்கொண்டிருந்தார். போலீசார் எச்சரித்தும் கேட்காத நிலையில் முருகன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story