கீழையூர் - கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில்

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு அளவீடு, மதிப்பீட்டு முகாம்
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கீழப்பிடாகை ஊராட்சி சிந்தாமணி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், வளமிகு வட்டார மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறைக்கு கீழையூர் மற்றும் கீழ்வேளுர் வட்டாரத்திற்கு முதற்கட்டமாக 25 அங்கன்வாடி மையங்களுக்கு தலா ரூ.1லட்சம் மதிப்பீட்டில், முன் பருவ கல்வி உபகரணங்கள் மற்றும் மையத்திற்கு தேவையான நாற்காலி, குடிநீர் சுத்திகரிப்பான் இயந்திரம், விளையாட்டு பொம்மைகள், வரைபட புத்தகம், கிரையான்ஸ், குழந்தைகள் நாற்காலி, பேன் போன்ற பொருட்கள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், கீழ்வேளுர் எம்எல்ஏ நாகை மாலி ஆகியோர் வழங்கினர். பின்னர், கீழையூர் மற்றும் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மத்திய அரசின் அலிம்கோ நிறுவனம் இணைந்து, நாகை மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவி உபகரணங்கள் வழங்கும் பொருட்டு, வட்டார அளவில் சிறப்பு அளவீடு மற்றும் மதிப்பீட்டு முகாம் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர், கீழ்வேளுர் எம்எல்ஏ நாகை மாலி ஆகியோர் நேரில் பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மெர்லின் அன்னமலர், புள்ளியியல் அலுவலர் அந்துவன் சேரல், கீழையூர் மற்றும் கீழ்வேளுர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாத்திமா ஆரோக்கியமேரி, நிறுவன மேலாளர் சுமையா மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story