அரியலூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
X
அரியலூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அரியலூர், பிப்.23 - தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால் தான் தமிழக கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை விடுவிக்கமுடியும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் அண்ணாசிலை அருகே திராவிடர் கழகத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், தமிழகத்துக்கான நிதி பங்கீட்டை தர மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், மும்மொழி கொள்கை மூலம் ஹிந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மு.பாலகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். படவிளக்கம்:அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தினர்.
Next Story