பெரம்பலூருக்கு கூடுதல் பேருந்து சேவை துவைக்கி வைத்தார் அமைச்சர்

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திருவாளந்துறை மற்றும் கை.களத்தூர் ஊராட்சிகளில் இருந்து பெரம்பலூருக்கு கூடுதல் நடைக்கான பேருந்து சேவையினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாளந்துறை ஊராட்சி மற்றும் கை.களத்தூர் ஊராட்சிகளில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் கூடுதல் நடைக்கான பேருந்து சேவையினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் தொடங்கி வைத்தார். திருவாளந்துறை மற்றும் கை.களத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருவாளந்துறை முதல் பெரம்பலூர் வரையிலும், கை.களத்தூர் முதல் பெரம்பலூர் வரையிலுமான கூடுதல் நடைக்கான பேருந்து சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், கும்பகோணம் மண்டல போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநர் இரா.பொன்முடி, ஆட்மா தலைவர் வீ.ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story

