நாகை துறைமுகத்திலிருந்து நாகை - இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு

கப்பல் போக்குவரத்தை மும்மதத்தினர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி நாகை- காங்கேசன் துறைமுகத்திற்கு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. வாரம் 5 நாட்கள் இரு மார்க்கமும் சென்று வந்த கப்பல், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பாதுகாப்பு கருதி, அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இம்மாதம் 12-ம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில், தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி கிடைப்பதில் காலத்தாமதம் ஏற்பட்டது. பின்னர், அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதால், 83 பயணிகளுடன் நாகை துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. மும் மதங்களை சேர்ந்தவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நாகை -இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்படுவது குறித்து நிர்வாகத்தினர் கூறியதாவது இனி செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது. இரு மார்க்கத்திற்கும் சேர்த்து கட்டணம் ரூ.8500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் லக்கேஜ் கை பையில் 10 கிலோ வரை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கு கட்டணம் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Next Story