பொன்னி மெடிக்கல் சென்டர் சார்பில் பெண்கள் நலம் பற்றிய விழிப்புணர்வு.

பொன்னி மெடிக்கல் சென்டர் சார்பில் பெண்கள் நலம் பற்றிய விழிப்புணர்வு.
X
பொன்னி மெடிக்கல் சென்டர் சார்பில் பெண்கள் நலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,பிப். 23: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள ஸ்ரீ பொன்னி மருத்துவ மையத்தில் பெண்ணே நீ நலமா என்ற தலைப்பில் பெண்கள் நலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொன்னிமணி தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு ஸ்ரீ பொன்னி மருத்துவ மையத்தின் உரிமையாளர் மருத்துவர் அரவிந்த் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மூத்த மருத்துவர் சாந்தி வீரமணி, உளவியல் நிபுணர் மருத்துவர் உவைஸ், மகப்பேறு மருத்துவர் சாய் தர்ஷினி,புற்றுநோய் நிபுணர் மருத்துவர் நிர்மல் அரசு ஆகியோர் பெண்கள் விழிப்புணர்விற்கான சிறப்புரையாற்றினார்கள். முடிவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை ஸ்ரீ பொன்னி மெடிக்கல் சென்டர் நிர்வாகம் செய்திருந்தனர்.
Next Story