மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியதற்கு நன்றி அறிவிப்பு கூட்டம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியதற்கு நன்றி அறிவிப்பு கூட்டம்.
X
பரமத்தி வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியதற்கு நன்றி அறிவிப்பு கூட்டம்.
பரமத்தி வேலூர்,பிப்:23 நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்த பரமத்தி வேலூர் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தில் மூலம் 33 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தாசில்தார் சர்வேயர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் மற்றும் மறைந்த முன்னாள் பரமத்தி வேலூர் மாற்றுத்திறனாள சங்கத்தின் தலைவர் சதீஷ்குமார் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலையும் செலுத்தப்பட்டது. விழாவிற்கு நாமக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்த பரமத்தி வேலூர் மாற்றுத்திறனாளி நல சங்கத்தின் செயலாளர் கதிர்வேல் தலைமை தங்கினார். நாமக்கல் மாவட்டம் சங்கத்தின் தலைவர் கலைஞர் அவர்கள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் மருத்துவர் தில்லைகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் பொன் கதிரேசன், மாவட்ட பொறுப்பாளர்கள் பரமத்தி வேலூர் கிளை சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 100க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாமக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளி நார்த்தங்கத்தின் செயலாளர் சுப்ரமணியன் நன்றி தெரிவித்தார்.
Next Story