ராமநாதபுரம் இலவசமாக தென்னை இடு பொருள்கள் வழங்கப்பட்டன

ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் ஒரு கோடியே 88 லட்சம் மதிப்பிலான தென்னை இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது விவசாயிகள் வரவேற்பு.
ராமநாதபுரம் மத்திய சென்னை வளர்ச்சி வாரியத்தின் சார்பில் தென்னை இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடியே 87 லட்சத்து 66 ஆயிரத்து 940 ரூபாய் நிதி மத்திய அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட முழுவதும் தென்னை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக வாலாந்தரவை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் வாலாந்தரவை தெற்கூரில், இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவில் மத்திய தென்னை வாரியத்தின் தலைவர் சுப. நாகராஜன் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி அதன் பயன் குறித்து விளக்கி பேசினார் மேலும் மத்திய அரசு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான அரசு இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு எளிமையான முறையில் இடுபொருள் கிடைப்பதற்கும் தென்னை வளர்ச்சியில் அதிக மகசூல் ஈட்டுவதற்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இலவசமாக விவசாயிகளுக்கு செய்து வருகிறது விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்படுகிறது அதே போல இலவச ஈடுபொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை குறிக்கலாக கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது பொதுமக்கள் விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார் இரட்டையுரணி காரான் , ,ரெகுநாதபுரம், வண்ணான் குண்டு, நைனாமரைக்கான், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு முதல் கட்டமாக தென்னை இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது மண்டபம் வட்டாரத்தில் தென்னை விவசாயிகள் நலக்குழு தலைவர் நந்தகுமார், செயலாளர் பாலமுருகன், சமூக ஆர்வலர் தினேஷ், உள்ளிட்டோர் தெற்கூர் பகுதியில் விவசாயிகளுக்கு , யூரியா, பொட்டாஸ்,மாங்கனிஸ், போரக்ஸ், சூப்பர் பாஸ்பேட் தென்னை கன்றுகள் இடுபொருட்களை இலவசமாக வழங்கினர் இதனை ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்
Next Story