செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் தேவஸ்தானத்தில் அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு யாகம்

செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் தேவஸ்தானத்தில் அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு யாகம்
X
மாணவ, மாணவிகள் பங்கேற்பு
அரசு பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு யாகம் சேலம் செவ்வாய்பேட்டை ருக்குமணி சமேத பாண்டுரங்கநாத சுவாமி தேவஸ்தானத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் 12 வகையான ஹோமங்கள் நடத்தப்பட்டன. யாகத்தில் திரிவேணி சங்கமம் மகா கும்பமேளா தீர்த்தம் சுவாமிக்கு அபிஷேகம் செய்து மாணவர்களுக்கு பிரசாதம், பேனா, அட்சதை வழங்கப்பட்டது. மாணவ- மாணவிகள் எந்தவித தயக்கமும் இல்லாமல் நம்பிக்கையுடன் தேர்வு எழுதி வெற்றி பெற மாணவர்களுக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை லட்சுமி ஹயக்ரீவர் வைபவ குழு ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமையில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Next Story