சேலத்தில் தமிழன் பார்த்திபன் முன்னிலையில்

சேலத்தில் தமிழன் பார்த்திபன் முன்னிலையில்
X
மாற்றுக்கட்சியினர் த.வெ.க.வில் இணைந்தனர்
சேலத்தில் த.வெ.க.வில் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி சேலம் மாணிக்கம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் 50 வக்கீல்கள், 500-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் த.வெ.க.வில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து தமிழன் பார்த்திபன் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்தீபன் பேசுகையில், வருகிற சட்டசபை தேர்தலில் த.வெ.க. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்து விஜய்யை முதல்- அமைச்சராக்க அயராது உழைக்க வேண்டும் என்றார்.
Next Story