அரக்கோணம்:பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்

X
அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் விடியற்காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது பயணிகள் காத்திருப்பு அறையில் 14 வயதுடைய சிறுவன் தனியாக நீண்ட நேரமாக உட்கார்ந்து இருந்ததை பார்த்த போலீசார் சிறுவனை அழைத்து விசாரித்தனர். அப்போது அரக்கோணத்தில் உள்ள தனது நண்பனை பார்க்க திருவள்ளூரில் இருந்து ரயிலில் வந்ததாக தெரிவித்தான். இதனை அடுத்து சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசா ரணை மேற்கொண்டதில் திருவள்ளூர் பெரிய குப்பம் பகுதியை சேர்ந்த இந்த சிறுவன், பள்ளிக்கு செல்லவில்லை என பெற்றோர் திட்டியதால் நேற்று முன்தினம் மாலை திருவள்ளூரில் இருந்து ரயிலில் அரக்கோணம் வந்ததாக தெரிவித்தான். அதைத்தொடரந்து சிறுவனின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை வழங்கி சிறுவனை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
Next Story

