அறக்கொன் : ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

அறக்கொன் : ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
X
ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஷாம், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் அதேபகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரது மகன் கமலேஷ் என்கிற ஆகாஷ் படித்து வருகிறார். இருவரும் நண்பர்களாவர்.கமலேஷின் உறவினர் வீடு அரக்கோணத்தை அடுத்த தணிகை போளூர் பகுதியில் உள்ளது. தணிகைபோளூருக்கு கமலேஷுடன் ஷாம் வந்துள்ளார். மதியம் சாப்பிட்ட பின் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஷாம் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு கமலேஷ் கூச்சல் போட்டுள்ளார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் ஷாமை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் வழியிலேயே ஷாம் இறந்து விட்டார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story