கன்னியாகுமரி கடலில் தவறி விழுந்த வாலிபர் உடல் மீட்பு

X
சேலம் மாவட்டம் மாறாமங்கலத்தை சேர்ந்த 27 பேர் கொண்ட குழுவினர் நேற்று நாகர்கோவில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கன்னியாகுரியை சுற்றி பார்க்க ஆசைப்பட்டு அங்கு சென்றனர். அங்கு விஜய் (27) என்ற வாலிபர் உட்பட சிலர் கடலில் உள்ள காந்தி மண்டபத்தின் பின்புறம் தடை செய்யப்பட்ட 'மரண பாறை 'என்று கூறப்படும் பாறையில் சென்று அங்கு செல்ஃபி எடுத்த மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக விஜய் கடலில் தவறி விழுந்தார். உடனடியாக கடலோர பாதுகாப்பு குடும்ப போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் சம்பவத்திற்கு சென்று அங்கு படகு மூலம் தேடும் பணி ஈடுபட்டனர். பின்னர் மீண்டும் இன்று 24ஆம் தேதி காலை 7:00 மணி முதல் தேடத் தொடங்கினர். அப்போது விஜயின் உடல் கடலில் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் உடன் சென்றவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
Next Story

