குமரி கிராமங்களில் திமுகவினர் இந்தி  எதிர்ப்பு கோலம் 

குமரி கிராமங்களில் திமுகவினர் இந்தி  எதிர்ப்பு கோலம் 
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய பகுதி  ஸ்ரீ லெட்சுமிபுரம் கிராமங்களில் வீட்டு வாசல்களில் இந்தி திணிப்பை எதிர்ப்போம் என  கோலமிட்டும், ஒன்றிய அரசே இந்தி திணிப்பை நிறுத்து என தட்டி  போர்டுகளை வீட்டு வாசல்களில் கட்டியுள்ளனர்.       இதுகுறித்து அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வக்கீல் மதியழகன் கூறும் பொழுது திமுகவோ, தலைவர்களோ, இந்தி மொழி படிப்பதை எதிர்க்கவில்லை. ஆனால் மும்மொழி கல்வி திட்டத்தில்  கையெழுத்து போட்டால் தான் நிதி தர முடியும் என்பது இந்தி மொழியை மறைமுகமாக தினிக்கும் முயற்சி. தமிழக முதல்வர் எத்தனை கோடி தந்தாலும் தமிழகத்தின்  இருமொழி கொள்கைக்கு எதிராக மும்மொழி கொள்கையில் கையெழுத்து போடமாட்டேன் என உறுதி அளித்திருப்பது தமிழ்மொழி பேசும் அனைவருக்கும் ஆறுதல் தந்துள்ளது. மேலும் இந்தி மொழியை திணிக்க முயற்ச்சித்தால்   ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை விட்டு ஒட ஒட விரட்டப்படும் என்றார்.
Next Story