தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமையும் என முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி உறுதி.

தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமையும் என முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி உறுதி.
திருப்பத்தூர் மாவட்டம் தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமையும் என முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி உறுதி. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அம்மாவின் 77ஆவது பிறந்தநாள் விழா திருப்பத்தூர் நகர கழக செயலாளர் டி.டி. குமார் தலைமையில் நடைப்பெற்றது. இதில் முன்னால் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளாருமான கே.சி. வீரமணி கலந்து கொண்டு புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, அம்மாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி தமிழகத்தில் அம்மா மருந்தகங்களை மூடி ஸ்டாலின் பெயரில் மருந்தகங்களை திறந்து வருகிறார். எனவே மீண்டும் அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் மலரும் அப்போது அம்மாவின் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். பின்னர் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு 1000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்னதானம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் மருத்துவர் லீலாசுப்பிரமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல தலைவர் டாக்டர். நாகேந்திரன், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் டாக்டர்.திருப்பதி உள்ளிட்ட ஏராளம் அதிமுக பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story