ஜோலார்பேட்டை அருகே கொலை செய்த நபரை கைது! செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

ஜோலார்பேட்டை அருகே கொலை செய்த நபரை கைது! செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கொலை செய்த நபரை கைது! செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திம்மராயன் (வயது 48) ரியல் எஸ்டேட் வேலை செய்து வருகிறார். இவருடைய அக்கா மகன் ஓய்வு பெற்ற ராணு வீரர் சக்கரவர்த்தி என்பவர் தனது மூன்று ஏக்கர் நிலத்தை 38 லட்சத்திற்கு பைனான்சியரிடம் வைத்துள்ளதாக தெரிகிறது. இதனை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திம்மராயன் அந்த பைனான்ஸ் நபர்களிடமிருந்து வாங்கி தனது பெயரில் மாற்றியுள்ளார். இதன் காரணமாக சக்கரவர்த்தி மற்றும் திம்மராயன் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி காந்தி நகர் பகுதியில் உள்ள நிலத்தில் வாழை தோப்பில் திம்மராயன் இருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த சக்கரவர்த்தி தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஜோலார்பேட்டை போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சக்கரவர்த்தியை தேடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று திம்மராயன் உறவினர்கள் இறந்தவரின் படத்தை வைத்துக்கொண்டு திருப்பத்தூர் - வாணியம்பாடி செல்லக்கூடிய சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலை செய்த நபரை கைது செய்ய வேண்டும் மேலும் திம்மராயன் உடைய மகனை சக்கரவர்த்தி கொலை செய்வது விடுவேன் என மிரட்டல் விடுத்ததாகவும் எனவே அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அரிந்து வந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்போது அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் இதுகுறித்து விசாரணை செய்து வருவதாகவும் கூறி சமரசம் செய்தனர் அதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலந்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story