மக்களிடம் குறைகளை கேட்டறிந்த ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ்

X
இந்தியா கூட்டணியில் தி.மு.க. சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கே.இ.பிரகாஷ் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும். குறைகளை கேட்கவும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் உப்புபாளையம், முத்துக்குமார் நகர், திருவள்ளூர் நகர், கச்சேரி வலசு, ஸ்ரீராம் நகர் உள்பட 23 இடங்களில் திறந்த வேனில் நின்று மக்கள் குறைகளை கேட்டு நன்றி தெரிவித்தார். அப்போது தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல பத்மநாபன். மாவட்ட துணை செயலாளர் ராசி. கே.ஆர்.முத்துகுமார், நகராட்சி தலைவர் கனியரசி முத்துக்குமார், நகர செயலாளர் சபரி. எஸ்.முருகானந்தன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் எம். எஸ்.மோகன செல்வம், நகர அவைத் தலைவர் சி. குமரவேல், முன்னாள் நகராட்சி தலைவர் ஏ.எம்.சி. செல்வராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story

