வேளாங்கண்ணியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

வேளாங்கண்ணியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
X
முன்னாள் அமைச்சர் எம்எல்ஏ பங்கேற்பு
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், அதிமுக பேரூர் கழகம் சார்பில், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான வேதாரண்யம் எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அவர் பேசியதாவது பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் அனைத்து பகுதிகளிலும் நடைபெறுவதன் முக்கிய காரணம், உறுப்பினர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகப்படுத்த தான். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது குறித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து மக்கள் நலத்திட்டங்கள் மக்கள் விரோத திமுக அரசினால் அடியோடு செயல்படாமல் முடக்கப்பட்டு விட்டது. இந்த திட்டங்கள் அனைத்தும் மீண்டும் செயல்படுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக தேர்வு செய்வதன் மூலம் செயல்படுத்த முடியும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், வேளாங்கண்ணி பேரூர் கழக செயலாளர் சாம்சன் பிராங்கிளின், மாவட்ட மீனவரணி இணை செயலாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் என்.வி.ராமராஜன், பேரூர் கழக பொருளாளர் இளையதாஸ், பேரூர் கழக அவை தலைவர் தர்மராஜன் மற்றும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Next Story