கோனேரிபாளையம் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியோடு இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

ஊராட்சியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம், நாங்கள் அனைவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பை (100 நாள் வேலை) நம்பி பிழைப்பு வருகிறோம்,
கோனேரிபாளையம் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியோடு இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு; 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்று திரண்டதால் பரபரப்பு. பெரம்பலூர் அடுத்த கோனேரிபாளையம் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியோடு இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இணைக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது எங்கள் ஊராட்சியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம், நாங்கள் அனைவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பை (100 நாள் வேலை) நம்பி பிழைப்பு வருகிறோம், எங்கள் கிராமத்தை பெரம்பலூர் நகராட்சியோடு இணைத்தால் எங்களுக்கு இந்த வேலை வாய்ப்பு பறிபோகும் என்பதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகும் என்பதால் எங்களது ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியில் இணைக்க வேண்டாம் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Next Story