முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா போட்டோவிற்கு மாலை அணிவித்து மலர்கள் மரியாதை
பெரம்பலூர் வட்டம், செங்குணம் அண்ணா நகர் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைமின் கீழ் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா போட்டோவிற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கி ஜெயலலிதா பிறந்த நாளை இன்று அதிமுக நிர்வாகிகள் கொண்டாடினார். பின் செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் 17 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மதியழகன் முன்னிலையில் தலா ஒரு பேனா, பென்சில், ரப்பர், சார்ப்பனர், ஒரு அடி ஸ்கேல் வழங்கி வாழ்த்துகள் கூறினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆ.சுதாகர், மு.தேவேந்திரன், மா.சொக்கலிங்கம், குமார் அய்யாவு ( கட்சி சார்பின்றி) உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story





