ஆலங்குளத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவர்களின் என்எஸ்எஸ் திட்ட சிறப்பு முகாம் முத்துகிருஷ்ணபேரியில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் ஒரு பகுதியாக 200 மரக்கன்றுகள் நடும் விழாவை திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் தலைமையில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூத்து முதல் முத்துகிருஷ்ணபேரி வரை இந்த மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இம்முகாம் தொடர்ந்து நாளை மறுநாள் வரை நடைபெற உள்ளது. இந்த மரம் நடும் விழா நிகழ்ச்சியில் ஏராளமான சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

