ராமநாதபுரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா பிறந்தநாள் கொண்டாட்டம்
ராமநாதபுரம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்தநாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில், ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டியன் ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளர் எம் ஏ முனியசாமி தலைமையில், ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் 77 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி அங்கு கூடியிருந்த பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்ளிட்டோருக்கு ஒருவரை ஒருவர் மாறி மாறி கேக்கு ஊட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு ரோஜா பூ தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான மகளிர் அணியினர் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



