மும்மொழி கொள்கை எனும் பெயரில் இந்தியை திணிக்கும் மத்திய பா.ஜ.க.அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி சார்பில் மும்மொழி கொள்கை எனும் பெயரில் இந்தியை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதி ரூ.2152 கோடியை கேட்டால்,மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி தருவோம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாப் கூறியுள்ள நிலையில், மும்மொழி கொள்கை எனும் பெயரில் இந்தியை திணிக்கும் மத்திய பா.ஜ.க.அரசைக் கண்டித்து , பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாளை 25.02.2025, செவ்வாய்க்கிழமை,காலை 9.30 மணியளவில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
Next Story

