ராமநாதபுரம் முதல்வர் மருந்தகம் திறப்பு
ராமநாதபுரம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்கூட்டுறவுத்துறையின் மூலம் 1000 முதல்வர் மருந்தகங்களை காணொளிக்காட்சியின் மூலம் திறந்து வைத்ததையொட்டி, ராமநாதபுரம் நகரில் உள்ள முதல்வர் மருந்தக விற்பனை மையத்தில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,அவர்கள், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் அவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் வர்த்தகன் தெரு-இராமேஸ்வரம், கிருஷ்ணா தியேட்டர் அருகில் பரமக்குடி, கமுதி, மண்டபம், வாலாந்தரவை, திருப்பாலைக்குடி, திருவாடானை, செல்வநாயகபுரம், முதுகுளத்தூர், அபிராமம், அரண்மனை-ராமநாதபுரம், வெளிப்பட்டிணம்-ராமநாதபுரம், ஆனந்தூர், ஆர்.எஸ்.மங்கலம், கீழமுந்தல்-கடலாடி, திருவள்ளுவர் நகர்-பரமக்குடி, பாம்பூர்-பரமக்குடி, திருவரங்கம்-முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன. முதல்வர் மருந்தகங்கள் மூலம் மருந்துகள் 20% முதல் 90% வரை மருந்துகளின் வகைக்கேற்ப குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் பயன்பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென செய்திக்குறிப்பில் இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் ஜுனு அவர்கள், ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம் அவர்கள், ராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் அவர்கள், நகர்மன்ற உறுப்பினர் தன பாண்டியம்மாள் அவர்கள், கூட்டுறவுத்துறை கண்காணிப்பு அலுவலர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story




