மாஸ் கிளீன் செய்த தூய்மைப் பணியாளர்கள்

X
Komarapalayam King 24x7 |24 Feb 2025 5:04 PM ISTகுமாரபாளையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மாஸ் கிளீன் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை சரிவர செய்வது இல்லை என்று, ஒவ்வொரு நகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் புகார் கூறி வருகின்றனர். இதனை தவிர்க்க சுகாதார அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சுகாதார அலுவலர் ஒருவர் மற்றும் மூன்று சுகாதார உதவி அலுவலர்கள் இருந்த நிலையில் தற்போது இந்த துறையில் இருவர் மட்டும் உள்ளனர். மக்கள் தொகைக்கு ஏற்ற தூய்மைப்பணியாளர்கள் இல்லை என்றும் கூறபடுகிறது. இருப்பினும் குறைகள் வராத நிலையில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களை வைத்துகொண்டு, தூய்மை பணிகளை செய்து வருகிறார்கள். நேற்று விடுமுறை என்றாலும் கோம்பு பள்ளத்தில் மாஸ் கிளீன் பணியை தூய்மை பணியாளர்கள் செய்தனர். இது பற்றி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது: எங்களால் முடிந்தவரை தூய்மை பணிகளை செய்து கொண்டுதான் உள்ளோம். ஒரு சில இடங்களில் எங்களது கவனத்திற்கு வராத பணிகள் செய்ய முடியாமல் போகிறது. கவுன்சிலர்கள் அவரவர் வார்டில் கூறும் பணிகளை செய்து கொடுத்து கொண்டுதான் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
