மக்கள் நீதி மய்யம் எட்டாம் ஆண்டு துவக்க விழா மரக்கன்றுகள் வழங்கிய நிர்வாகிகள்

X
Komarapalayam King 24x7 |24 Feb 2025 5:08 PM ISTமக்கள் நீதி மய்யம் எட்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி குமாரபாளையத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் எட்டாம் ஆண்டு துவக்க விழா குமாரபாளையம் சுந்தரம் நகர் பகுதியில் சேலம் மண்டல செயலர் காமராஜ் தலைமையில் நடந்தது. மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சித்ரா, நிர்வாகிகள் மல்லிகா, உஷா, சொர்ணாம்பாள் ஆகியோர் கட்சிக்கொடியை ஏற்றினர். இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. சிறுவர், சிறுமியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நகர செயலாளர் மனோகரன், நிர்வாகிகள் வரதராஜ், ராம்கி, வெங்கடேஷ், பாஸ்கரன்,அன்பழகன்,தங்கராசு, ராஜூ, சண்முகசுந்தரம் மற்றும் பொதுமக்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.
Next Story
