திருமுருகில் திமுக வடக்கு - தெற்கு ஒன்றிய

X
நாகை மாவட்டம் திருமருகலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், திமுக வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமார் வரவேற்றார். கூட்டத்தில், வருகிற மார்ச் 3-ம் தேதி நாகைக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, மத்திய அரசின் ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளைகள்தோறும் பதாகைகள் வைப்பது, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சந்தோஷ், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட அயலக அணி துணை தலைவர் விஜயகணபதி நன்றி கூறினார். அதேபோல், தெற்கு ஒன்றியம் சார்பில், கோட்டூர் ஊராட்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
Next Story

