அதிமுக முன்னாள் முதல்வர் பிறந்த தின விழா

அதிமுக முன்னாள் முதல்வர் பிறந்த தின விழா
X
அதிமுக முன்னாள் முதல்வர் பிறந்த தின விழா
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும் அஇஅதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமானசெல்வி ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி திருச்செங்கோடு நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் அங்கமுத்து தலைமையில் பேரணி நடைபெற்றது நகரின் முக்கிய வீதிகளான 4 ரத வீதிகள் வழியாக சென்ற பேரணி அண்ணா சிலை அருகே நிறைவுற்றது.பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சந்திரசேகர்,முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்லப்பன்,நகர அவை தலைவர் பொன்னுசாமி,மாவட்டத் துணைச் செயலாளர் முருகேசன்,வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் எம் டி சந்திரசேகர் தெற்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சக்திவேல், நகர துணை செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் ராஜவேல், நகர அம்மா பேரவை செயலாளர்நகர் மன்ற உறுப்பினர் கார்த்திகேயன், நகர் மன்ற உறுப்பினர் மல்லிகா,முன்னாள் தொகுதி கழக செயலாளர் சபரி தங்கவேல் இணை செயலாளர் முரளிதரன் அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் பழ.ராமலிங்கம் ஆகியோர் உள்ளிட்ட மகளிர் அணியினர் இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் வட்டக் கழகச் செயலாளர்கள் சார்பணி அமைப்பாளர்கள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.
Next Story