திருச்செங்கோடு பகுதியில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா
தமிழ்நாடு முழுவதும்ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் வடக்கு வீதி அண்ணா சிலை அருகே ஒரு முதல்வர் மருந்தகம், மற்றும் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் ஒரு மருந்தகம் என இரண்டு மருந்தகங்கள் திறப்பு விழா செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு மருந்தகத்தில் முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். விழாவில் முன்னாள் நகர் மன்ற தலைவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நகர் மன்ற துணைத் தலைவர்நகர திமுக செயலாளர் கார்த்திகேயன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு, எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் நகரச் செயலாளர்கள் குமார்,அசோக் குமார்,தலைமை நிலைய செயலாளர் லாவண்யா ரவி, நகர் மன்ற உறுப்பினர்கள் மனோன்மணி சரவண முருகன், மகேஸ்வரி, செல்வி ராஜவேல், தாமரைச்செல்வி மணிகண்டன், செல்லம்மாள் தேவராஜன், புவனேஸ்வரி உலகநாதன், சினேகா ஹரிகரன், அடுப்பு ரமேஷ்,முருகேசன், டி என் ரமேஷ், ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
Next Story



